மகா சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள் திறப்பு!
ADDED :5017 days ago
தளவாய்புரம் : பஞ்சபூத ஸ்தலங்களை ஒரே இரவில் தரிசிக்கும் வசதி உள்ள தென் தமிழகம். பாண்டிய நாட்டில் பஞ்சபூத ஸ்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு தளவாய்புரம் மற்றும் சுற்று வட்டரா மக்கள் தங்களது இரு சக்ர வாகனம்,வேன் களிள் இரவில் இந்த கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். இதில் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில் (நிலம்), தாருகாபுரத்திலுல்ல மத்தியஸ்தநாதர் கோயில் (நீர்), கரிவலம் வந்தநல்லூரிலுல்ல பால்வண்ணநாதர்கோயில்(நெருப்பு), தென்மலையிலுல்ல பிரகதீஸ்வரர்கோயில் (காற்று),தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில்(ஆகாயம்)இந்த ஐந்து கோயில்களையும் சென்று வர 100கிலோ மீட்டர் தூரம் ஆகும்.ஐந்து கோயில்களும் இன்று இரவு முழுவதும் திறந்து வைத்திருக்கப்படும்.