காமாட்சி அம்மன் கோயில் செல்ல ஆட்டோ கட்டணம் நிர்ணயம்
தேவதானப்பட்டி :தேவதானப்பட்டியில் இருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நபருக்கு ஐந்து ரூபாய் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என்று ஆட்டோக்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. போதிய அளவு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தேவதானப்பட்டியில் இருந்த ஷேர் ஆட்டோக்கள் கோயிலுக்கு டிரிப் அடிக்கின்றன. நிபந்தனைகள்: விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஆட்டோவில் 7 பேர்களுக்கு மேல் ஏற்றக்கூடாது. ஆட்டோக்களை பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க வேண்டும். மேலும் தேவதானப்பட்டியில் இருந்து கோயிலுக்கு தலா 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்தாலோ, அதிகமான பக்தர்களை ஏற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பெரியகுளம் டி.எஸ்.பி., மொபைல் எண்-94454 94860.