ஜெகநாதர் தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு
ADDED :2501 days ago
தர்மபுரி: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், தர்மபுரியில், ஜெகநாதர் தேரோட்டம் நடந்தது. தர்மபுரி, டி.என்.சி., விஜய் திருமண மண்டபத்தில் தேரோட்டம் துவங்கியது. மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் ஜெகநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ண பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேதாஜி பைபாஸ் சாலை, திருப்பத்தூர் சாலை, கடை வீதி, சத்திரம் மேல்தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. அப்போது, கிருஷ்ணரின் பாடல்களைப் பாடியவாறும், நடனமாடியும் பக்தர்கள் சென்றனர். இதையடுத்து, பகவத் கீதை மற்றும் பகவான் கிருஷ்ணர் குறித்து, இஸ்கான் நிர்வாகிகள் சொற்பொழிவு நடத்தினர்.