பழமையான கோவில் சீரமைப்பு
ADDED :2500 days ago
மாமல்லபுரம்: சாலவான்குப்பத்தில் இடிந்த நிலையில் காணப்படும், பழங்கால சுப்ரமணியர் கோவிலுக்கு, சுற்றுலா பயணியர் செல்ல, தொல்லியல் துறை, நடைபாதை அமைக்கிறது.மாமல்லபுரம் அடுத்த, சாலவான்குப்பம் பகுதியில், பல்லவர் கால, புலிக்குகை எனப்படும், அதிரணசண்ட குடைவரை மண்டப வளாகம் உள்ளது.தொல்லியல் துறை பராமரிக்கும் இந்த மண்டபத்தின் வெளியே, வடக்கு பகுதியில், சிறிய பாறைக்குன்று, அதை சுற்றிலும் மணல்மேடு இருந்தது.கடந்த, 2004ல், சுனாமி பேரலை தாக்கியபோது, மணல்மேடு அரித்தது. அந்த இடத்தில், பல்லவர் காலத்திற்கும் முந்தைய, சுப்ரமணியர் கோவில் இருந்தது; நாளடைவில் அக்கோவில் அழிந்தது தெரிந்தது.இக்கோவில் பற்றி பொதுமக்களும், சுற்றுலா பயணியரும் அறிய, புலிக்குகை வளாகத்திலிருந்து, கோவில் பகுதிக்கு செல்ல, தொல்லியல் துறை நடைபாதை அமைக்கிறது.