விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2549 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம், பெண்ணாடம், நடுவீரப்பட்டு பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு நேற்று (டிசம்., 20ல்) வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து; அருகம் புல், வில்வம், மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடந்தது.
அதேபோன்று, விருத்தாசலம் ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ் வரர், முதனை முது குன்றீஸ்வரர், நல்லூர் வில்வ வனேஸ்வரர், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர் மற்றும் மலையாண்டவர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.