உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்னூத்தில் புனித அருளானந்தர் ஆலயம் திறப்பு விழா

தன்னூத்தில் புனித அருளானந்தர் ஆலயம் திறப்பு விழா

சேர்ந்தமரம் : தன்னூத்து புனித அருளானந்தர் ஆலயம் திறப்பு விழா நடந்தது. சேர்ந்தமரம் மறைப்பணித்தளம் தன்னூத்து புனித அருளானந்தர் ஆலய புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. பாளை., மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் ஆலயத்தை அர்ச்சித்து வைத்து மறையுரை நிகழ்த்தினார். கொல்கத்தா அருட்தந்தை மைக்கேல்ராஜ் பாண்டியன் புதிய ஆலயத்தை திறந்து வைத்தார். விழாவில் அருட்தந்தையர்கள் அன்புரோஸ், ஜேம்ஸ், தேவராஜன், ஜெகன், சகாய சின்னப்பன், ஜெயபாலன், ஆரோக்கியராஜ், தொழிலதிபர் பிரகஸ்பதி, முன்னாள் பஞ்., தலைவர் திருமலைநாதன், ஜேம்ஸ் மரியசெல்வம், லோக்சபா தொகுதி இளைஞர் காங்.,செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், நாட்டாண்மைகள் சவரிமுத்து, இருதயராஜ், உபதேசியார் பாக்கியசாமி, தங்கரத்தினநாடார், தங்கசாமிநாடார், ஓய்வு பெற்ற தாசில்தார் சூசை அந்தோணி, பஞ்.,தலைவர் மாசாணம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவமணி அரசு மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !