ருத்ராட்சம்
ADDED :5020 days ago
ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவிபாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் என்ற அரக்கனைக் கொன்று, தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் 33லட்சம் ஆண்டுகள் கண்களைத் திறந்தபடி தவமிருந்தார். தவத்தின் முடிவில் கண்களை மூடியபோது, அதில் இருந்து விழுந்த துளிகளில் ருத்ராட்சம் உற்பத்தியானது. ருத்ராட்சம் என்ற சொல்லுக்கு சிவனின் கண்கள் என்று பொருள். இதுபற்றிய தகவல் தேவிபாகவதம் நூலில் சொல்லப்பட்டுள்ளது. நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.