காரியாபட்டியில் பிரபஞ்ச நல யாகம்
ADDED :2516 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் மனு அறக்கட்டளை மற்றும் அகில உலக விநாயகர் ஆன்மிக பேரவை சார்பாக உலக மக்கள் சுபிட்சமாக வாழ, மழை பெய்து விவசாயம் பெருக, கல்வி, தொழில் வளம் பெருகி, இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை காத்து அனைவருக்கும் இறையருள் கிடைக்க பிரபஞ்ச நல யாகம் நடந்தது.
நிறுவனர் பரதன் தலைமை வகித்தார். புலவர் சிதம்பரம், வழக்கிறிஞர் ஜெய்பிரகாஷ் முன் னிலை வகித்தனர். ஆன்மிக பேரவை அமைப்பாளர் தெய்வசிகாமணி துவக்கி வைத்தார்.
ஆன்மிக குரு ஞானபேரவை கொல்லிமலை சித்தர் கபிலேஸ்சுவாமிகள் யாகம் வளர்த்தனர். மாநில செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர் ராஜாமணி, யோகா ஆசிரியர் ராமலிங்கம், கவிஞர் மணியன், பொறுப்பாளர்கள் நஞ்சையா, ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டனர்.