பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) ஆருத்ரா தரிசனம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் மாணிக்கவாசகருக்கு 10 நாள் உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் 23ம் தேதி மாலை நடந்தது.விழாவையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமான் நடராஜர் மண்டபத்திலிருந்து நூறு கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் மாணிக்கவாசகருக்கு நடராஜபெருமாள் நடன காட்சியளித்தல், தொடர்ந்து திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
இறைவனுக்காக அம்பாளிடம் சுந்தரர், பறவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் தூது செல்லும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.