திருத்தணி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :2561 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் விடுமுறை நாளான நேற்று, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.மேலும், மலைக்கோவில் நிர்வாகத்தால் விற்கப்பட்ட, 25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.