தேவகோட்டை சிலம்பணி மாவடிக்கருப்பர் கோயிலில் பால்குடம்விழா
ADDED :2559 days ago
தேவகோட்டை : தேவகோட்டை தர்ம சாஸ்தா பஜனை குழு சார்பில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நேற்று (டிசம்., 25ல்) ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற பால்குடம் நிகழ்ச்சி நடந்தது. சிலம்பணி மாவடிக்கருப்பர் கோயிலில் இருந்து 101 பக்தர்கள் பால்குடம் எடுத்து, திருப்புத்தூர் ரோடு, ஆண்டவர் செட் வழியாக வந்து ஐயப்பனுக்கு நேர்த்தி செய்தனர்.