உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பென்னாகரம் அருகே, முனியப்பன் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு

பென்னாகரம் அருகே, முனியப்பன் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று விழா நடப்பது வழக்கம். நேற்று (டிசம்., 25ல்) நடந்த விழாவில், சிக்கனம்பட்டி, புதூர், அரிச்சந்திரனூர், அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விரதம் இருந்து, மாலை அணிந்தும், பக்தர்கள் வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் புனிதராஜ், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !