ஓசூர் அருகே உள்ளமாரியம்மா தேவி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2498 days ago
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், பழமையான மாரியம்மா தேவி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) மாலை, 6:00 மணிக்கு கணபதி பிரார்த்தனை, கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (டிசம்., 25ல்) காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, கும்ப பூஜை நடந்தது.
தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஓசூர் நகராட்சி முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், ஊர் கவுண்டர் நாகராஜ், ராஜா, முனிராமய்யா, கண்ணன் உட்பட பலர்
பங்கேற்றனர். கோவிந்தஅக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.