கரூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED :2495 days ago
கரூர்: கரூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா, நேற்று(டிசம்., 25ல்) விமரிசையாக நடந்தது. இயேசு கிறிஸ்து பிறந்தநாளை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகின்றனர். நேற்று (டிசம்., 25ல்) கரூர் புனித தெரசம்மாள் தேவாலயத்தில், பங்கு தந்தை ராயப்பன் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில், சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன.