நீலகிரியில் பூகுண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்
ADDED :2579 days ago
குன்னுார், நீலகிரியில் நடக்கும், ஹெத்தையம்மன் பண்டிகையின், ஒரு பகுதியாக, விரதம் இருந்தவர்கள், பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர்.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும், படுகரின மக்கள், ஆண்டுதோறும், டிச., - ஜன., மாதங்களில், ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதில், கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில், எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ஒன்றிணைந்து விழாவை நடத்துகின்றனர்.நேற்று, காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் விழாவில், கும்பம் எடுத்து வந்த பூசாரி, கோவில் பூசாரி உட்பட, 11 பேர், பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.