ஆண்டிபட்டி ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல பூஜை விழா
ADDED :2513 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல உற்சவம், மாகாளியம்மனுக்கு பூச்சொறிதல் விழா நடந்தது.முதல்நாளில் ஐயப்ப சுவாமிக்கு 1,008 அபி ேஷகம் நடந்தது. கோயில் வளாகத்தில் சுப்பிரமணியர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வழியாக ஐயப்பசுவாமி வலம் வந்தார்.இரண்டாம் நாள் விழாவில் 49 அடி உயர சர்வசக்தி மாகாளியம்மனுக்கு 108 குடம் பால் அபிேஷகம், பூச்சொறிதல் நடத்தப்பட்டது. குருபகவானுக்கு குபேர ேஹாமம் அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவில் ஐயப்பசுவாமிக்கு படிபூஜை, விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் விழாக்குழுவினர் செய்தனர்.