உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பயண்ணசாமி கோவில் பொங்கல் விழா: 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

குப்பயண்ணசாமி கோவில் பொங்கல் விழா: 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, 60 வேலம்பாளையம் பஞ்., துக்காச்சி குக்கிராமத்தில், செல்வக்குமாரசாமி, குப்பயண்ணசாமி கோவிலில், பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்னதாக விழா கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு தினசரி அபிஷேகம், ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. பக்தர்கள் மாலை சாத்துதல், தேங்காய் உடைப்பு, பொங்கல் வைத்து வழிபட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !