உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம் என்பது என்ன?

தேவாரம் என்பது என்ன?

சென்னை:ராமலிங்கர் பணிமன்றம், நாரத கான சபா இணைந்து நடத்திய, "தேவார மூவர் இசைக்கலை விழா- 2012 இரண்டாம் நாள் நிகழ்ச்சி, மயிலாப்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் நடராஜன் வரவேற்று பேசியதாவது:தண்ணீர் பாய்ந்தால் அது ஆறு, கீழோடினால் அது அருவி, நிறைந்தால் ஏரி, நின்றால் குளம் அது போல ஒன்று தான் தமிழ் இசை. தமிழ் இசை, பல்வேறு அங்கங்களாக பிரித்து கொடுக்கப்படுகிறது. இதற்கு, கம்பர், சம்பந்தர், தாயுமானவர், ராமலிங்க அடிகளார், மதுர கவி, சுப்ரமணி பாரதியார் போன்றோர், பக்தி நிறைந்த பாடல்களை அமைத்துள்ளனர். அதில், பக்தியில் வளரும் இசை தான் எல்லா வடிவங்களிலும் நிறைந்துள்ளது.நல்ல இசைக்கு மூன்று அம்சம் உண்டு அதில், பாடும் போது குரல் இனிமையாக இருக்க வேண்டும். இரண்டாவது, பாடும் முறையில் கற்பனையை சேர்த்து அளிக்க வேண்டும். முன்றாவது, பாடும் பாடல், நெஞ்சை தொட வேண்டும்.இவ்வாறு நடராஜன் பேசினார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையேற்று பேசும் போது, ""தேவாரம் என்பது தெய்வத்தன்மை வாய்ந்த மொழி என்பது பொருள். இவை, மூன்று நாயன்மார்களால் இயற்றப்பட்டது. இத்தகைய, தேவார மூவர் பாடல்களை கொண்டு, தமிழ் இசை விழாக்கள் நடக்க வேண்டும், என்றார்.சங்கரி கிருஷ்ணன் குழுவினரின் தமிழ் இசை பாடல் இன்னிசை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !