உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காட்டில் மஹாபெரியவா ஆராதனை

திருவெண்காட்டில் மஹாபெரியவா ஆராதனை

திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள ஸ்ரீ ராமமட வேத வ்யாசராமம் என்ற வேத பாடசாலையிலுள்ள ஸ்ரீ பெரியவா கோவிலில் ஸ்ரீ மஹா பெரியவா 25 வது ஆராதனை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா பெரியவா , காமாட்சி அம்மன் மூல விக்கிரங்களுக்கும் காமாட்சி அம்மன், வேத வியாசர் , ஆதி சங்கரர் மற்றும் ஸ்ரீ மஹா பெரியவா உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகங்களும் அலங்காரங்களும் மிக விமர்சையாக நடந்தது.  முதலில் 16 வேத விற்பனர்களுக்கு பாதபூஜை செய்து அனைத்து சாஸ்திரோத்தமான மரியாதைகளும் செய்யப்பட்டது . பிறகு அவர்கள் அனைவரும் நாதஸ்வர, மேளதாளங்கள் முழங்க , அலங்கரிக்கப்பட்ட யானை மற்றும் பசு கன்றுடன் கூடி முன்னணி வகுக்க , ஊர்வலமாக மாலை மரியாதைகளுடன் ஸ்ரீ மஹா பெரியவா கோயிலுக்கு பக்தர்கள் படை சூழ அழைத்து வரப்பட்டார்கள். இதன் பிறகு வேத விற்பனர்களால் வேத பாராயணம் ஓதப்பட்டு சகல ஆராதனை நிகழ்ச்சிகளும் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு ஆராதனை பூரணமாக பூர்த்தியாயிற்று. ஸ்ரீ மஹா பெரியவாளின் ஆராதனையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலிலிருந்து பிரசாதங்கள் சமர்பிக்கப்பட்டன. டில்லி , சென்னை என பல இடங்களிலிருந்து நேரில் வருகை புரிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுகிரஹத்திற்கு பலரும் பாத்திரமானார்கள். நேரில் வரமுடியாத உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் ஏராளமான ஸ்ரீ மஹா பெரியவாளின் பக்தர்களின் வசதிக்கேற்ப இந்த நிகழ்ச்சி நேரிடையாக சமூக வலைதளத்தின் மூலமாக ஒளிபரப்பப்பட்டு பல பக்தர்களால் கண்டு களிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !