உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரிசிங்கிரிகுடி கோவிலுக்கு 6ம் தேதி உலக நன்மை வேண்டி பாதயாத்திரை

புதுச்சேரிசிங்கிரிகுடி கோவிலுக்கு 6ம் தேதி உலக நன்மை வேண்டி பாதயாத்திரை

புதுச்சேரி:உலக நன்மை வேண்டி, வரும் 6ம் தேதி, புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து, சிங்கிரிகுடி கோவிலுக்கு பாதயாத்திரை நடக்கிறது.

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றத் தலைவர் இளங்கோ கூறியதாவது:உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுகிழமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருமால் அடியார்கள், 50க்கும் மேற்பட்ட பஜனை குழுக்கள் மற்றும் பக்தர்கள், சிங்கிரிகுடி கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் ஏற்பாடு செய்து வருகிறது.23ம் ஆண்டாக, வரும் 6ம் தேதி பாதயாத்திரை நடக்கிறது.

புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் தொடங்கும் பாதயாத்திரை, புதுச்சேரி கடலூர் சாலை வழியாக அபிஷேகப்பாக்கம் சிங்கிரிகுடி கோவிலில் நிறைவு பெறும். திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாஸனத்துடன் பாதயாத்திரை, காலை 6:00 மணிக்கு தொடங்கும். இதில் திவ்யநாம பஜனை, பிருந்தாவன பஜனைகள், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !