உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு ஜன.5ல் மார்கழி அமாவாசை

வத்திராயிருப்பு ஜன.5ல் மார்கழி அமாவாசை

வத்திராயிருப்பு:ஜன.5 மார்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு இன்று 3 முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷத்திலிருந்து 4 நாட்கள் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவர்.

ஜன.5 மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன.,3ல்) காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட உள்ளனர். இவர்கள் ஜன.6 மாலைக்குள்
திரும்பிவிடவேண்டும்.பருவமழையின்றி மலைப்பகுதி வறண்டு இருப்பதால், பக்தர்கள் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

தண்ணீர் பாக்கெட்டுகள், கேரிபைகளுக்கு அனுமதி கிடையாது, என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !