வாசுதேவநல்லூர் கோயிலில் நித்ய அன்னதானம் துவக்கம்
ADDED :5012 days ago
சிவகிரி : வாசுதேவநல்லூர் குபேர ஆஞ்சநேயர் கோயிலில் நித்ய அன்னதானம் துவங்கியது. வாசுதேவநல்லூருக்கு மேற்கே ராப்பை கண்மாய் அருகில் மங்கள விநாயகர், சீதாதேவி சமேத கல்யாண ராம, லட்சுமணர், குபேர ஆஞ்சநேயர் சுவாமி போன்ற புதிய சிலைகள் உருவாக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 45 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள குபேர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வாசு., வெங்கடாசலபதி கோயில் சார்பில் நித்ய அன்னதான திட்டம் துவங்கியது. தினமும் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். இச்சிறப்பு திட்டத்தை முன்னிட்டு குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், பால், தயிர், மஞ்சள், மாவு போன்ற அபிஷேகங்கள் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம், பெரிய தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.