உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தி அமைதியான வாழ்வை தரும் ஆன்மிக சொற்பொழிவில் பேச்சு

பக்தி அமைதியான வாழ்வை தரும் ஆன்மிக சொற்பொழிவில் பேச்சு

உடுமலை:தேசம் மற்றும் தெய்வ பக்தியோடும், அழகான சரணாகதி மார்க்கத்தில், அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும், என
கோபாலவல்லி தாஸர் பேசினார்.

உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், உழவாரம் திருப்பணி மன்றம் மற்றும் உடுமலை பஜனை சபா டிரஸ்ட் சார்பில், 22வது ஆண்டு ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, 7 நாட்கள் நடக்கிறது.இதில், திருக்கோளூர் பெண் ரகஸ்யம் என்ற தலைப்பில், கோபாலவல்லி தாஸர் சொற்பொழிவாற்றினார்.

நேற்றுமுன்தினம் (ஜன.,1ல்) சொற்பொழிவில் அவர் பேசியதாவது:திருக்கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யம் என்பது சுவாமி ராமானுஜரிடம் சாதாரணமான ஒரு பெண் பிள்ளை சொன்ன, 81 வாக்கியங்களே ஆகும். உலகில் அனைவரும், பிறரோடு தங்களை ஒப்பிட்டு பார்த்துக்கொள்கின்றனர். ஆனால், அந்த பெண் பிள்ளை, தான் பக்தர்கள் போல் இல்லையே என தன்னை ஒப்பிட்டு பார்த்து, ராமானுஜரிடம் தான் சாதாரணமானவள், என்பதற்கான
வாக்கியங்களை அடக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

இத்தகைய மகாத்மாக்கள் வாழ்ந்த புண்ணிய தேசம் இந்த பாரத தேசமாகும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மதமாற்றம் போன்றவற்றை தடுக்க முடியும்.தேச மற்றும் தெய்வீக பக்தியோடு, ராமானுஜர் காட்டிய, அழகான சரணாகதி மார்க்கத்தில், வாழ்க்கையை வாழ்ந்து, நிம்மதியாக இருக்க வேண்டும். இவையே உபானாயசத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !