அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியலில் ரூ. 34.54 லட்சம்
ADDED :2568 days ago
அலங்காநல்லூர்:அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. தங்கம் 76 கிராம், வெள்ளி 512 கிராம், ரூ.34.54 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்தன. வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி சிவலிங்கம், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி கண்காணிப்பில் அய்யப்பா சேவா சங்கத்தினர், சுந்தராஜா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.