உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

மதுரை: இன்று (ஜன.,5ல்) அனுமன் ஜெயந்தியை ஒட்டி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுவருகிறது.

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் தீபாராதனைகள் முடிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகம் யோகவிநாயகர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவம், நடந்தது. இதை முன்னிட்டு, காலையில்; மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின், மூலவருக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், உற்சவர் ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைகளால் அலங்கரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதுரை எல்லீஸ் நகர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு,  1008 வடைமாலை, வெள்ளி கவசத்தில்  சுவாமி அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !