உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலம் பாதை விரிவாக்கம் : கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலம் பாதை விரிவாக்கம் : கலெக்டர் ஆய்வு

 திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையை விரிவுபடுத்த தமிழக அரசு, 65 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதையடுத்து, அங்கு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.இதில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 140 இடங்களில், சிசிடிவி கேமராக்கள், தேவையான இடங்களில் மின் கம்பங்களை மாற்றி அமைப்பது, 100 மீட்டருக்கு ஒன்று வீதம், பக்தி இசை மற்றும் பக்தர்களுக்கான அறிவிப்பு ஒலி பெருக்கிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஏற்கனவே, 5 கி.மீ., வீதம், எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 9 கி.மீ.,க்கு, 2.54 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. கிரிவலப்பாதையில், 62 மரங்கள் பட்டுப்போயின. அதில், 30 மரங்களில் மர சிற்பங்கள் செதுக்கும் பணி நடந்து வருகிறது. பழனியாண்டவர் கோவில் அருகேயுள்ள வேப்ப மரத்தில் அணில் சிற்பமும், புளிய மரத்தில் ஒட்டகச் சிவிங்கி, பறவை சிற்பமும் வடிவமைக்கும் பணி நடக்கிறது.மாவட்ட கலெக்டர் கந்தசாமி, நேற்று பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !