திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :2561 days ago
திண்டிவனம்: திண்டிவனம், செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் ஆலயத்தில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அனுமன் ஜெயந்தி விழா மற்றும் 23 கிலோ எடையுள்ள பஞ்சலோக அனுமன் உற்சவர் வழங்கும் விழா நடந்தது.
இதையொட்டி, பஞ்சலலோக உற்சவமூர்த்திக்கு யாக பூஜை, அபிஷேகம் சிறப்பு பூஜை நடத்தி, பாலமுருகன் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வாசவி கிளப் ஆளுநர் சிவக்குமார், பொருளாளர் நாகராஜன், திண்டிவனம் வாசவி கிளப் தலைவர் அரிபுருஷோத்தமன், பொருளாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.