காஞ்சிபுரம் கோவில்களில் விளக்குகள் அறநிலைய செயலர் ஆய்வு
ADDED :2559 days ago
காஞ்சிபுரம்:இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் அபூர்வ வர்மா காஞ்சிபுரத்தில் நேற்று (ஜன., 6ல்), புராதன கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மின் விளக்குகளை ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ரங்கசாமிகுளம், மங்கள தீர்த்தம் குளம், கைலாசநாதர் கோவில், கச்ச பேஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட, ஒன்பது கோவில் களிலும் ஆய்வு செய்தார்.அது போல, பேருந்து நிலைய பயணியர் பொருள் பாதுகாப்பு அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்றவற்றையும் பார்வையிட்டார்.அவருடன், சுற்றுலாத் துறை ஆணையர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ரமணி, வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, நகராட்சி ஆணையர் கூடுதல் பொறுப்பு மகேந்திரன் சென்றனர்.