உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையை கடந்த கோதண்டராமர் சிலை: பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலையை கடந்த கோதண்டராமர் சிலை: பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை: கரியமங்கலம் கேட் அருகே நிறுத்தப்பட் டுள்ள, விஸ்வரூப கோதண்டராமர் சிலையை ஏராளமான மக்கள் வழிபட்டனர். கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயர, விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

இதில், சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில், 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. அங்கேயே, முகம் மட்டும் வடிவமைக்கப்பட்டு, கடந்த, 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில், சிலை புறப்பட்டது. பின்னர், நேற்றுமுன்தினம், திருவண்ணாமலையில் பஸ் ஸ்டாண்டை கடந்து, கிரிவலப்பாதையில், திருநேர் அண்ணாமலை அருகே சென்றடைந்தது. இரவு நேரமானதால், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும், நேற்று காலை, 6:00 மணிக்கு புறப்பட்டது. செங்கம் முன்னதாக, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், கரியமங்கலம் கேட் அருகே நிறுத்தப்பட்டது. மீண்டும், இன்று காலை பயணத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழி நெடுகிலும், பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !