உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம்

பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம்

மங்கலம்பேட்டை: சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் 8ம் ஆண்டு காவடி ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணியளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !