காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் 12ல் பிரம்மோற்சவம்
ADDED :2499 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், ஜன., 12ல், கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்குகிறது.காஞ்சிபுரத்தில், வைணவ தலங்களில், சிறப்பு பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசத்தில் ஒன்று.இங்கு, திருஊரகம் திவ்ய தேசத்தை தவிர, திருநீரகம், திருக்காரகம் மற்றும் திருக்கார்வனம் என, மொத்தம், நான்கு திவ்ய தேசங்களும், ஒரே கோவிலில் உள்ளதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாத பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம், ஜன., 12ல், கொடியேற்றத்துடன் துவங்கி, 21ல், உற்சவம் நிறைவு பெறுகிறது.