கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலிப்பு
ADDED :2495 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் எண்ணெய்காப்பு உற்ஸவத்தின் இரண்டாம் நாளை முன்னிட்டு கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எண்ணெய்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு ஜன.14 வரை தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மதியம் எண்ணெய்காப்பு வைபவம், இரவு மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது. ஜன.15 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.16 அன்று பெரியாழ்வார் சன்னிதியில் கனுவைபவம் நடக்கிறது.