திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் உழவாரப்பணிகள்
ADDED :2559 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் பள்ளி சாரணர், சாரணியர் சங்கத்தின் சார்பில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.முருகன் துவக்கி வைத்தார். மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார். சாரணர், சாரணியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சிவா செல்வராஜ் முன்னிலை வகித்தார். உத்தரகோசமங்கை,
திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் நஷேனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேதலோடை நாடார் மகாஜனசங்க உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கோயிலின் வெளி, உள் பிரகாரங்களில் துாய்மை பணி செய்யப்பட்டது. பஷே்கார் கண்ணன், மண்டபம் மாவட்ட செயலாளர் மகாலட்சுமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.