பழநியில் பக்தர்கள் குளிக்க, ஷவர் வசதி
ADDED :2561 days ago
பழநி: பழநி தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, இடும்பன்குளம், சண்முகநதி உள்ளிட்ட பகுதிகளில், ஷவர் குளியல் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தைப்பூச விழா, 15 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. கோவில் சார்பில், பக்தர்கள் வசதிக்காக மின்வசதியுடன் கூடிய நிழற்பந்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. சண்முகநதிக்கரை மற்றும் இடும்பன்குளத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக, ஷவர் குளியல் அறை, உடை மாற்றும் அறை, தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. தற்காலிக நவீன கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் மருத்துவ குழு உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.