சுப்பையா சுவாமிகள் குரு பூஜை விமரிசை
ADDED :2561 days ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், சுப்பையா சுவாமியின், 59வது குருபூஜை விழா, நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு, பல சித்தர்கள் வந்து, வழிபாடு நடத்தி, ஆன்மிக பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதில், கடும் விரதம் மேற்கொண்டு, சைவ நெறிகளை பரப்பிய, சுப்பையா சுவாமிகளும் ஒருவர்.ஆண்டுதோறும் நடத்தப்படும் அவரது குருபூஜை விழா, 59ம் ஆண்டாக, நேற்று நடந்தது. இதை ஒட்டி, காலை, 5:30 மணிக்கு, சுவாமிக்கு நன்னீராட்டுதலும், தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல், சொற்பொழிவு, ஜோதி வழிபாடு உள்ளிட்டவை நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.