பெரியகுளம் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2546 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் கூடாரை வெல்லி (பாவை நோன்பு) விழா நடந்தது. விரைவில் திருமணம் நடக்க, குழந்தை பாக்யம், சகல ஐஸ்வர்யம் வேண்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு ஆயிரக்கணக்கில் வளையல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சி.சரவணன், பக்தர்கள் செய்தனர்.