108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்
ADDED :5013 days ago
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற 108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் 108 லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தை 108 முறை விடிய, விடிய சுற்றிவந்து தங்களது வேண்டுதலை நிறைவு செய்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள், இளைஞர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கானஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜீ, தர்க்கார் ஹம்சன்கோவில் கணக்கர்கள், இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பிற்கு பாபநாசம் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீஸார் பாதுப்பு பணியில் ஈடுபட்டனர்.