உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அசலதீபேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

அசலதீபேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். மோகனூர், காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற அலசதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி மதுக்கரைவேணி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை நான்கு கால பூஜை, சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, தேவாரம், திருவாசகம் பாடல், தமிழிசை வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கூத்தபிரான் நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதே போல், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில், எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர், அங்காளம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !