எம்பார் சுவாமி உற்சவ விழா
ADDED :2471 days ago
மதுரமங்கலம்: மதுரமங்கலத்தில், எம்பார் சுவாமி உற்சவ விழா, இன்று துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, மதுரமங்கலம் கிராமத்தில், கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இது, ராமானுஜரின் சிற்றன்னையின் மகன், எம்பார் சுவாமி அவதரித்த தலம்.சுவாமி அவதரித்த உற்சவ விழா, ஆண்டுதோறும், 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா, இன்று துவங்குகிறது.முக்கிய நிகழ்ச்சியான, காந்துார் புறப்பாடு நிகழ்வு, 18ம் தேதி நடைபெறும். 21ல், சாற்றுமுறை தீர்த்தம், கந்தபொடி உற்சவம் நடைபெற உள்ளது.