கர்நாடகா கோவில்களுக்கு யாத்திரை ரயில்
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் உள்ள, புகழ் பெற்ற கோவில்களுக்கு, பக்தர்கள் சென்றுவர வசதியாக, இந்திய ரயில்வே மற்றும் உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., யாத்திரை சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த யாத்திரை ரயில், மதுரையில் இருந்து, 22ம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் கோவை போத்தனுார் வழியாக செல்லும்.இப்பயணத்தில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள, உடுப்பி கிருஷ்ணர், முருடேஸ்வர், கொல்லுார் மூகாம்பிகை, ஹோரநாடு அன்னபூரணி, தர்மஸ்தலா மஞ்சுநாதர், குக்கே சுப்ரமணியர் கோவில்கள் மற்றும் சிருங்கேரி சாரதா பீடத்திற்கும் சென்று வரலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,930 ரூபாய் கட்டணம். கூடுதல் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற, இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.