உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

அலங்காநல்லுார்:மதுரை அழகர்கோவில் சோலைமலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கொடிமரத்திற்கு பூஜை, உற்ஸவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. ஜன., 14- மாலை காமதேனு, 15-ல் ஆட்டுக்கிடாய் வாகனம், 16ல் பூச்சப்பரம், 17ல் யானை வாகனம், 18ல் பல்லாக்கு, 19ல் குதிரை வாகனம், 20ல் காலை தங்க தேரோட்டம், அன்று மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !