தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் குளம் கும்பாபிஷேகம்
ADDED :2534 days ago
தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் குளம் கும்பாபிஷேக விழா, நேற்று (ஜன., 13ல்( நடந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பழமை வாய்ந்த சிவசுப்பிரமணி சுவாமி கோவில் மற்றும் அதன் எதிரே தெப்பகுளம் உள்ளது. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தெப்பத்திருவிழா நடந்தது. சமீப காலமாக, குப்பை கொட்டப்பட்டதால், தெப்பவிழா நடத்த முடியவில்லை.
இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் திரட்டி, 100 நாட்களில், தெப்பத்தை இளைஞர்கள் சீரமைத்தனர். புனரமைக்கப்பட்ட தெப்பத்துக்கு, நேற்று கும்பாபி?ஷக விழா நடந்தது. நேற்று (ஜன.,13ல்) காலை, புனித நீர், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள், குளத்துக்கு கும்பா பிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை, செங்குத சிவனேய செல்வர்கள், இந்து சமய அறநிலையத் துறையினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.