உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்ச சிவ சிம்மாசனம் பக்தர்கள் பார்வை!

ருத்ராட்ச சிவ சிம்மாசனம் பக்தர்கள் பார்வை!

கடலூர்:கடலூரில் 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவ சிம்மாசனம் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி சிவசக்தி பீடத்தில் இருந்து ருத்ராட்ச சிவ சிம்மாசனம் கடலூர் வந்தது. கடலூர் ஆர்ய வைஸ்ய சங்கம், வாசவி சங்கம் மற்றும் வாசவி வனிதா சங்கம் சார்பில் இந்த சிம்மாசனம் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிம்மாசனத்தை வழிபட்டால் பல்வேறு பிரச்னைகள் தீரும் என்பதால் பக்தர்கள் பலர் தரிசனம் செய்து வருகின்றனர்.ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், கண்ணன், பிரபாகரன், காசிநாதன், மணிகண்டன், சுவர்ணலதா, சுகந்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !