சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை குழந்தை ஏசு பேராலயத்தில் வழிபாடு
சேலம்: சாம்பல் புதனை முன்னிட்டு சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் நெற்றியில் சாம்பல் பூசி ஆசி பெற்றனர். கிறிஸ்தவர்களால் கடை பிடிக்கப்படும் தவக்காலம் சாம்பல் புதனான நேற்று துவங்கியது. நேற்று காலையில் குழந்தை ஏசு பேராலயத்தில் பிஷப் சிங்கராயன் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறின் போது ஆலயத்தில், கிறிஸ்தவர்களால் ஒப்படைக்கப்பட்ட ஓலையை கொண்டு தயார் செய்யப்பட்ட சாம்பலை பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கு பூசி, ஆசிர்வாதம் வழங்கபட்டது.
* அழகாபுரம் புனித மிக்கேல் தேவாலயம், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி மாதா தேவாலயம், சூரமங்கலம் லூர்து மாதா தேவாலயம், உடையாப்பட்டி அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் சாம்பல் பூசி ஆசி வழங்கப்பட்டது.