உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வழிபாடு

ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வழிபாடு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குழந்தைவேலப்பர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர்.

ஆண்டு தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக முருக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். பல வழிதடங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வந்து சேர்வர். இங்கிருந்து பழநிக்கு ஒரே வழியில்தான் செல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் பழநி ரோட்டில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தையாக வீற்றிருக்கும் முருகனை வணங்கிச் செல்வது வழக்கம்.

பக்தர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய குழந்தையாக உள்ள முருகனிடம் மனம் உருகி வேண்டிக் கொள்வர். வேண்டுதல்கள் நிறைவேறியவுடன், குழந்தைகளுக்கு பிடிக்கும்
மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு நடத்திச் செல்வர். இந்த கோயிலில் உள்ள மரங்கள், மயில் சிலையில் மிட்டாய்களை ஒட்டி வணங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !