பாரியூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கோபிசெட்டிபாளையம்: கோபி புதுப்பாளையம் பஜனை கோவிலில், பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் நேற்று (ஜன., 16ல்) நடந்தது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த் திருவிழா, கடந்த டிச.,27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, பூமிதி திருவிழா, கடந்த, 10ல் நடந்தது. மலர் பல்லக்கு ஊர்வலம் 12ம் தேதி நடந்தது. தொடர்ந்து, தெப்போற்சவம் முடிந்து, சூலவேலுடன் விநாயகர் மற்றும் அம்மனுக்கு, கோபியில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. பின், புதுப்பாளையம் பஜனை கோவிலுக்கு, சூலவேலுடன் விநாயகர் மற்றும் பாரியூர் அம்மன் நேற்று(ஜன., 16ல்) அடைந்தனர். அங்கு, அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை, வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.