கைலாசநாதர் கோவிலில் அபிஷேகம்
ADDED :5014 days ago
புவனகிரி:புவனகிரியில் மகா சிவராத்திரியையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு மகா அபிஷேக ஆராதனை நடந்தது.புவனகிரி செட்டித்தெருவில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியையொட்டி கைலாசநாதர், கல்யாண சுந்தரி மற்றும் குபேர விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. கைலாசநாதர் சந்தனக்காப்பில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நிகழ்ச்சியில் புவனகிரி சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.