உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத்தேர் திருவிழா

கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத்தேர் திருவிழா

ப.வேலூர்: ப. வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில், தைப்பூச திருத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கடந்த, 13 மாலை, 6:05 ;- 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரவு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து நேற்று (ஜன., 16ல்) வரை தினமும் காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று (ஜன., 17ல்) மயில் வாகனத்திலும், நாளை (ஜன., 18ல்) யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலாவும், 19 இரவு திருக்கல்யாண உற்சவமும், 20ல், இரவு குதிரை வாகனத்தில்
சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 21 காலை, 5?:00? மணிக்கு மேல், 6:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை, 5:00? மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்
நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவில் திருத்தேர் திருவிழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !