திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு
ADDED :2464 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ‘‘மறுவூடல்’’ நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.