சேவுகம்பட்டி அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழம் சூறை
ADDED :2496 days ago
பட்டிவீரன்பட்டி : சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழ சூறை விழா நடந்தது. அறுவடை விழாவான தைத் திருநாளில், சூரியனுக்கும், உழவுத் தொழிலின் நண்பனான மாடுகளுக்கும் பொங்கல் வைக்கப்படுகிறது. இயற்கை நமக்கு செய்த கொடைக்காக நன்றியும், விவசாயம் செழிக்கவும் சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்களும் வாழப்பழ சூறைக்கு வந்து விடுகின்றனர். நேற்று மேள, தாளத்துடன் வாழைப்பழ கூடைகள் கிராம பூஜாரி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. பூஜாரி வீட்டிலிருந்து பழக்கூடைகள் மண்டு கோயில், சோலைமலை அழகர்பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தியபின், வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.